தீர்வைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - ட்ரம்ப்

இந்தியாவின் தீர்வைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - ட்ரம்ப்

by Staff Writer 27-06-2019 | 1:43 PM
Colombo (News 1st) இந்தியாவினால் அதிகரிக்கப்பட்ட புதிய தீர்வைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதுடன், அவை மீளப்பெறப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஜப்பானில் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ட்ரம்ப் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிரான தீர்வைகளை இந்தியா விதித்திருந்ததாகவும் அதற்கும் மேலதிகமாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் 28 பொருட்கள் மீது புதிதாக தீர்வைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த தீர்வை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், அவை நிச்சயமாக மீளப்பெறப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் மோடியுடன் தாம் பேசவுள்ளதாகவும் தமது டுவிட்டர் பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நாளை (28ஆம் திகதி) இடம்பெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.