மடகஸ்காரில் சன நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

மடகஸ்காரில் சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 27-06-2019 | 3:14 PM
Colombo (News 1st) கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் உள்ள மைதானம் ஒன்றில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மைதானத்தின் வாயில்கள் பொலிஸாரால் மூடப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வௌியேற முற்பட்டபோதே சன நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிகழ்வுகள் முடிவடைந்ததும் பாதுகாப்பு அதிகாரிகளால் மைதான வாயில்கள் திறக்கப்பட்டதாகக் கூறப்பட்டபோதும், முன்னதாக வாயில்கள் பொலிஸாரால் மூடப்பட்டமையே உயிரிழப்பிற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதே மைதானத்தில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததோடு 30க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.