பாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது

பாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது

பாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2019 | 7:45 am

Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று (27ஆம் திகதி) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தரம் ஒன்றுக்காக பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம் தொடர்பிலான அறிக்கையை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக, கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றுநிரூபம் தொடர்பிலான தமது பரிந்துரைகளும் அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்