நரேந்திர மோடி - மைக் பொம்பியோ சந்திப்பு

இந்தியப் பிரதமரை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

by Staff Writer 26-06-2019 | 1:43 PM
Colombo (News 1st) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நேற்று (25ஆம் திகதி) இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மைக் பொம்பியோ இன்று (26ஆம் திகதி) காலை பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது அமெரிக்காவினால் மட்டுப்படுத்தப்படவுள்ள H1 - விசா தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இருதரப்பு இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. மாத இறுதியில் ஒசாக்காவில் நடைபெறவுள்ள ஜி - 20 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பிற்கு முன்னரே பாரதப் பிரதமரை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் சந்தித்துள்ளார். இதேவேளை, இந்திய விஜயத்தில் ஈடுபட்டுள்ள மைக் பொம்பியோ, இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.