ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் சந்திப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2019 | 8:22 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைவது தொடர்பான மற்றுமொரு கூட்டமும் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

எதிர்வரும் 5 ஆம் திகதி மீளவும் கலந்துரையாடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

உத்தேச கூட்டமைப்பு வியூகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையே இன்று தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

முற்போக்கு இடதுசாரி கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல் நிறைவு பெற்ற பின்னர், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்