English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
26 Jun, 2019 | 4:11 pm
மலேசிய பாடசாலைகளில் மாணவர்கள் 75 பேருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள 400 பாடசாலைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளன.
மலேசியாவின் பசிர் குடங் நகரில் உள்ள 15 பாடசாலைகளில் சுமார் 75 மாணவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள பசிர் குடங் நகர் தொழிற்துறை நகரமாக விளங்குகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அங்குள்ள கிம்கிம் என்ற ஆற்றில் இரசாயனக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதில் இருந்து நச்சுவாயு வெளியேறி அதனை சுவாசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் நச்சுக்காற்றை சுவாசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், பசிர் குடங் நகரில் உள்ள 15 பாடசாலைகளில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தும் உள்ளனர். இதையடுத்து, உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நச்சுக்காற்றை சுவாசித்ததே மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே, பசிர் குடங் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூட கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
30 Dec, 2020 | 08:39 PM
15 Dec, 2020 | 03:52 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS