மட்டக்குளியில் ஐவர் சுட்டுக்கொலை: 9 பிரதிவாதிகளும் விடுதலை

மட்டக்குளியில் ஐவர் சுட்டுக்கொலை: 9 பிரதிவாதிகளும் விடுதலை

மட்டக்குளியில் ஐவர் சுட்டுக்கொலை: 9 பிரதிவாதிகளும் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2019 | 6:47 pm

Colombo (News 1st) கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியில் 5 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 9 பிரதிவாதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்துள்ளார்.

பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்வதற்கு முறைப்பாட்டாளர்களால் முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில், வழக்கின் சாட்சியாளர் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பாரிய சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த நீதிபதி, பிரதிவாதிகளை விடுவித்துள்ளார்.

மட்டக்குளி – சமித்புர பகுதியில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதுடன், இதன்போது ஐந்து பேர் உயிரிழந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்