சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் வட மேல் மாகாண குடும்பநல அதிகாரிகள்

சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் வட மேல் மாகாண குடும்பநல அதிகாரிகள்

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2019 | 1:02 pm

Colombo (News 1st) வட மேல் மாகாணத்தின் அனைத்துக் குடும்பநல அதிகாரிகளும் இன்று (26ஆம் திகதி) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக கொடுப்பனவு, வார இறுதி ஊதியம் வழங்குவதில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, அரச குடும்பநல அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வட மேல் சுகாதாரப் பணிப்பாளர், டாக்டர் என் பரீட்டிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, குடும்பநல அதிகாரிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் ஆளுநரின் அனுமதியின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

குடும்பநல அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்