சிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்

சிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்

சிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

26 Jun, 2019 | 4:21 pm

‘த லயன் கிங்’ திரைப்படத்தின் தமிழ் மொழியில் நடிகர் சித்தார்த் சிங்கத்திற்கு குரல் கொடுக்கவுள்ளார்.

1994ஆம் ஆண்டு வௌியாகிய ஹொலிவூட் திரைப்படமான ‘த லயன் கிங்’ தற்போது மீண்டும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இந்தியாவில் இது தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது.

அதில், தமிழ் மொழிக்கான பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ள அதேநேரம், இந்தப் படத்தின் சிம்பா எனும் சிங்க கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுக்கவுள்ளார்.

 

அழகிய சிங்கக் குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தைப் பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது.

லைவ் ஆக்ஷன் பதிப்பை பெரிய திரையில் காண பார்வையாளர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு, ஒரு அருமையான செய்தியை வழங்கியிருக்கிறது டிஸ்னி இந்தியா.

வரலாற்றில் மிகவும் விரும்பப்படும் திரைப்பட கதாபாத்திரங்களில் ஒன்றான சிம்பாவிற்கு, அதன் தமிழ் பதிப்பில் நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க இருக்கிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்