சர்வதேச ரீதியில் தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான விசேட தேயிலைக் கண்காட்சி

சர்வதேச ரீதியில் தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான விசேட தேயிலைக் கண்காட்சி

சர்வதேச ரீதியில் தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான விசேட தேயிலைக் கண்காட்சி

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2019 | 8:16 am

Colombo (News 1st) சர்வதேச ரீதியில் தேயிலைக்கான கேள்வியை மேலும் அதிகரிக்கும் வகையில், விசேட தேயிலை கண்காட்சி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலைக்கு சர்வதேச வர்த்தக சந்தையில் தொடர்ந்தும் சிறந்த வரவேற்பு காணப்படுவதாக பெருந்தோட்டத் கைத்தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே, இலங்கை தேயிலைச் சபை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் தேயிலைக் கண்காட்சியொன்றை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், வருடாந்தம் இலங்கைத் தேயிலை ஏற்றுமதி மூலம் சுமார் 250 கோடி ரூபா வருமானம் ஈட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்