கொழும்பு துறைமுக நகரை கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்ளடக்க நடவடிக்கை

கொழும்பு துறைமுக நகரை கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்ளடக்க நடவடிக்கை

கொழும்பு துறைமுக நகரை கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்ளடக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2019 | 2:27 pm

Colombo (News 1st) கொழும்புத் துறைமுக நகரத்தை கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான யோசனை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அமைய, கொழும்புத் துறைமுக நகரப்பகுதியை கொழும்பு நிர்வாக மாவட்டத்தில், கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளடக்கும் வகையில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

269 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட கொழும்புத் துறைமுக நகரத்தை முக்கிய நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்