கஞ்சிப்பானை இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி

கஞ்சிப்பானை இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி

கஞ்சிப்பானை இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2019 | 4:27 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான கஞ்சிப்பானை இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளரூடாக இந்த அனுமதி கிடைத்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

துபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு 90 நாட்கள் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா முன்னிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கஞ்சிப்பானை இம்ரான் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வெலியத்த மன்றில் ஆஜராகியிருந்தார்.

சந்தேகநபரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சட்டத்தரணி, குற்ற விசாரணை பிரிவினரின் கோரிக்கை தொடர்பில் தாம் தௌிவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேகநபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்த நீதவான், ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்