ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைக்கத் தீர்மானம்

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைக்கத் தீர்மானம்

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2019 | 11:42 am

Colombo (News 1st) ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை நாளை மறுதினம் (28ஆம் திகதி) நாரஹேன்பிட்டி ஷாலிக்கா மைதானத்துக்கு வருகைதருமாறு போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்