ACSA உடன்படிக்கையின் பிரதியைக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கடிதம்

by Staff Writer 25-06-2019 | 7:48 PM
Colombo (News 1st) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொள்ளவுள்ள ACSA  (Acquisition and Cross Servicing Agreement) உடன்படிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு கடிதத்தில் கோரியுள்ளார். அரசியலமைப்பின் 14 (அ) பிரிவு மற்றும் 2016ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் 24ஆம் சரத்தின் 3/1 பிரிவிற்கு ஏற்ப அதன் பிரதியை தமக்கு வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், வௌிவிவகார அமைச்சரிடம் கோரியுள்ளார்.