by Staff Writer 25-06-2019 | 6:55 PM
Colombo (News 1st) களனியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
45 வயதான தங்காபரண விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவரே துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து CCTV காணொளிகள் பெறப்பட்டுள்ளன.
அவற்றை பயன்படுத்தி சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பிரதேச சபை தலைவரின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரதேச சபையின் தலைவருடைய வீட்டு சுவரின் மீதும் வாகனத்தின் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.