இலங்கை கறுவா ஏற்றுமதிக்கு கடும் போட்டி

இலங்கை கறுவா ஏற்றுமதிக்கு கடும் போட்டி

by Staff Writer 25-06-2019 | 8:40 AM
Colombo (News 1st) உலக சந்தையில் கறுவாவுக்கு காணப்படும் போட்டியை வெற்றிகொள்ளும் வகையில் இலங்கை கறுவா கைத்தொழிலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புவியியல் சார் குறியீட்டை வழங்குவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கறுவா 80 வீதமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்கு மடகஸ்கார் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கறுவாவினால் இலங்கை கறுவா கடும் போட்டியை எதிர்நோக்குகின்றது.