தெமட்டகொட விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு முகங்கொடுப்பதாக குற்றச்சாட்டு

தெமட்டகொட விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு முகங்கொடுப்பதாக குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2019 | 1:33 pm

Colombo (News 1st) கொழும்பு – தெமட்டகொட விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் பாரிய சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தெமட்டகொட விபுலானந்தா கல்லூரியின் பின்புறத்திலுள்ள குடியிருப்புத் தொகுதியிலிருந்து வரும் கழிவுநீரினால் மாணவர்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தையும் அதற்கு பின்புறமுள்ள குடியிருப்புத் தொகுதியையும் மதில் ஒன்றே பிரிக்கின்றது.

மதிலுக்கு பின்னால் இருக்கும் குடியிருப்புத் தொகுதியிலிருந்து வரும் கழிவுநீர் பாடசாலை வளாகத்திற்கு வருவதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால் பாடசாலை வளாகத்தினுள் விளையாடுவதற்கோ அல்லது நடப்பதற்கோ பெரும் சிரமமாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்