சில சமயத் தலைவர்கள் வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்து வௌியிடுகின்றனர்: மிச்சேல் பெச்சலட்

சில சமயத் தலைவர்கள் வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்து வௌியிடுகின்றனர்: மிச்சேல் பெச்சலட்

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2019 | 8:41 pm

Colombo (News 1st) மனித உரிமைகள் பேரவையின் 41ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் (Michelle Bachelet) பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அழுத்தத்தை ஏற்படுத்தும் சில முயற்சிகள் இடம்பெறுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் எனக்கு அறிக்கையிடப்படுகின்றது. அது எனக்கு பிரச்சினையாகவுள்ளது. சில சமயத் தலைவர்கள் வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்து வௌியிடுகின்றனர். வன்முறைகளைத் தடுக்கும் வகையில் நாட்டின் அரசியல்வாதிகளும், சமயத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவசரகால சட்டத்தை குறுகிய கால வரையறைக்கு மட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நாம் முன்னுரிமையளிக்க வேண்டும். குரோதத்தையும் வன்முறைகளையும் தடுக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும். அதனால், அனைவரும் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை சிறந்த புரிதலுடன் செயற்படுவதே உசிதமானது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் கொள்கையில் இலங்கை செயற்படுகிறதே அன்றி, எந்தவொரு இனத்திற்கும் எதிராக செயற்படவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

10 வருடங்களாக நாட்டில் நிலவிய அமைதிக்கு பயங்கரவாதத் தாக்குதல் மூலம் குந்தகம் விளைவிக்கப்பட்டது.

ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகள் வீழ்த்தப்பட்டபோது ஐக்கிய நாடுகள் சபை எங்கிருந்தது?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சர்ச்சையில் இவர்களின் வகிபாகம் என்ன?

ஈரான் சர்வதேச வான்பரப்பில் அமெரிக்காவின் ட்ரோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை, தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு எவ்வாறு வியாபித்தது?

இவை குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஏன் மௌனம் காக்கிறது?

இரகசியமான மூன்று நிறுவனங்கள் உலகை நிர்வகிப்பதாக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அண்மையில் கூறினார்.

இந்த நிறுவனங்களுள் ஐக்கிய நாடுகள் சபையும் உள்வாங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்