கிம் ஜோங் உன்னின் கைகளை சேர்ந்தது ட்ரம்பின் கடிதம்

வட கொரிய ஜனாதிபதியின் கைகளை சேர்ந்தது ட்ரம்பின் கடிதம்

by Staff Writer 23-06-2019 | 10:46 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுப்பிய பிரத்தியேக கடிதத்தை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்டதாக வட கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தக்கடிதம் மிகவும் சிறப்பானதென புகழாரம் சூட்டியுள்ள கிம் ஜோங் உன், குறித்த கடிதத்தில் அடங்கியுள்ள சுவாரஸ்யமான விடயங்கள் தொடர்பில் ஆழமாக சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ட்ரம்பின் அசாத்திய ஊக்குவிப்பையும் கிம் ஜோங் உன் புகழ்ந்துள்ளார். இதேவேளை, இம்மாத ஆரம்பத்தில் வட கொரிய ஜனாதிபதி அனுப்பிய அருமையான கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.