இ.போ.சபைக்கு 79 மில்லியன் ரூபா மேலதிக வருமானம்

ரயில்வே ஊழியர்களின் பகிஷ்கரிப்பால் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்

by Staff Writer 23-06-2019 | 8:53 AM
Colombo (News 1st) ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபை 79 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பினால், பயணிகளின் நலன் கருதி நேற்று மற்றும் முன்தினமும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சபையின் பிரதி பொதுமுகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில், ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, இயன்றளவான சேவைகள் வழங்கப்பட்டதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது.