சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-06-2019 | 6:19 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 02. கொழும்பில் பாதாள உலகக் குழுவினரே மணல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 03. ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் வாக்குமூலப் பதிவுகள் அடுத்த மாதம் நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 04. பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 05. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 06. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 07. அவசரகால சட்ட ஏற்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இராணுவ உயரதிகாரி மார்க் எஸ்பரை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக பிரேரித்துள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 02. உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.