by Staff Writer 23-06-2019 | 1:32 PM
Colombo (News 1st) இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
கடுமையான உழைப்பின் மூலமாக கடந்த ஆண்டு இந்தத் தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டதாகவும், அதனாலேயே இவ்வாறான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.