விஜயின் பிகில்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஜயின் பிகில்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

by Bella Dalima 22-06-2019 | 5:46 PM
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை AGS நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகி பாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படம் 2019 தீபாவளிக்கு வெளிவருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் - அட்லி இணையும் படத்திற்கு 'பிகில்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.