by Staff Writer 22-06-2019 | 8:44 PM
Colombo (News 1st) போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளவர்களை அதிலிருந்து மீட்பதற்காக அவர்களை தெளிவுபடுத்தும் இலவச செயற்றிட்டம் இன்று ஜா எல சேனாநாயக்க மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாவட்ட பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு, பேலியகொட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் மற்றும் மக்கள் சக்தி V-Force என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
விசேட மனநல வைத்திய நிபுணர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் அறிவுரைகளை வழங்கினர்.
இதன் மற்றுமொரு கட்டம் வத்தளை - கரவலப்பிட்டிய வித்தியாலோக்க மகாவித்தியாலயத்தில் நாளை (23) நடைபெறவுள்ளது.