பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

by Staff Writer 22-06-2019 | 4:16 PM
Colombo (News 1st) பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். அதற்கமைய, மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க , வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன மேல் மாகாண மற்றும் போக்குவரத்து பிரிவின் பிராந்தியங்களுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 5 பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும், 5 பிரதி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், 8 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் 5 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக செயற்பட்ட 7 இன்ஸ்பெக்டர்களுக்கும், தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவருக்கும் தேவையின் நிமித்தம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.