சுறா மீன் துடுப்பு ஏற்றுமதி இறக்குமதிக்கு கனடா தடை

சுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்தது கனடா

by Bella Dalima 22-06-2019 | 4:43 PM
சுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கும் முதலாவது G20 நாடாக கனடா பதிவாகியுள்ளது. அழிந்து செல்லும் அபாயத்திலுள்ள சுறா மீன்களைக் காப்பாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுறா மீன்களின் துடுப்பு மிக விலை உயர்ந்த கடல் உணவாகக் கருதப்படுகின்ற நிலையில், அதன் விற்பனை காரணமாக உலகம் முழுவதிலும் பல சுறா இனங்கள் அழிவடைந்து வருகின்றன. இவ்வாறு விற்பனை செய்யப்படும் துடுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அழிவடைந்து செல்லும் சுறா இனங்களிலிருந்து பெறப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.