உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தெரிவு

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு

by Bella Dalima 22-06-2019 | 4:53 PM
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து செயற்பட்டு வரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத வாக்குகளைப் பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டி‌‌ஷ் ஹெரால்ட் பத்திரிகை 2019 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர் யார் என வாசகர்களிடையே கருத்துக்கணிப்பை நடத்தியது. இதற்காக உலகின் 25 நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் இந்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டிக்குத் தெரிவானார்கள். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. வாக்கெடுப்பின் நிறைவில் 30.9 சதவீத வாக்குகளைப் பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தெரிவு செய்யப்பட்டார். 29.9 சதவீத வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் 2 ஆவது இடத்தையும், 21.9 சதவீத வாக்குகளைப் பெற்று ட்ரம்ப் 3 ஆவது இடத்தையும், 18.1 சதவீத வாக்குகளைப் பெற்று ஜின்பிங் 4 ஆவது இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து, பிரிட்டி‌‌ஷ் ஹெரால்ட் பத்திரிகையின் ஜூலை 15 ஆம் திகதி வௌியாகும் பதிப்பில் அட்டைப் பக்கத்தில் மோடியின் படம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.