அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக மார்க் எஸ்பர் தெரிவு

அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இராணுவ உயர் அதிகாரி மார்க் எஸ்பரை பிரேரித்துள்ள ட்ரம்ப்

by Bella Dalima 22-06-2019 | 9:06 PM
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இராணுவ உயர் அதிகாரி மார்க் எஸ்பரை அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக பிரேரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக பணியாற்றி வந்த பெட்ரிக் ஷனஹான் தனது குடும்ப பிரச்சினை காரணமாக பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு இராணுவ உயர் அதிகாரியாக பணியாற்றிய மார்க் எஸ்பர் என்பவரை நியமிக்குமாறு அமெரிக்க அதிபர் முன்மொழிந்துள்ளார்.