ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் சுமார் 19 மில்லியன் ரூபா நட்டம்

ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் சுமார் 19 மில்லியன் ரூபா நட்டம்

ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் சுமார் 19 மில்லியன் ரூபா நட்டம்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2019 | 5:51 pm

Colombo (News 1st) ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் இரண்டு நாட்களில் சுமார் 19 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

ஏனைய நாட்களில் ரயில்வே திணைக்களம் 11 முதல் 15 மில்லியன் ரூபா வரை வருமானத்தை ஈட்டுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

வார இறுதி நாட்களில் 8 முதல் 10 மில்லியன் வரை ரயில்வே திணைக்களம் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று முந்தினம் (20) நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ரயில்வே திணைக்களத்தின் சில தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்