தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2019 | 4:02 pm

Colombo (News 1st) தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

காத்தமுத்து கணேசன் மற்றும் சுமித்திரா ஜெகதீசன் ஆகியோரே கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளார்.

கட்சிக்கு எதிரான செயற்பாடுகளிலும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணான வகையிலும் செயற்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அவர்கள் இருவரையும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்