ஜனாதிபதி வேட்பாளருக்கான மிலிந்த மொரகொடவின் 3 யோசனைகள்

ஜனாதிபதி வேட்பாளருக்கான மிலிந்த மொரகொடவின் 3 யோசனைகள்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2019 | 8:36 pm

Colombo (News 1st) அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளருக்கு மூன்று யோசனைகளை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட முன்வைத்துள்ளார்.

அவையாவன…

1. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை மாற்றி செயற்பாட்டு நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஸ்தாபிக்கப்பட ​வேண்டும்

2. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இரத்து செய்ய ​வேண்டும்

3. ஜனநாயக செயற்பாடுகளுக்கு பல்வேறு சமய மற்றும் இனங்களை சேர்ந்தவர்களை நேரடியாக இணைத்துக்கொள்ளும் முறைமை ஒன்று ஸ்தாபிக்கப்படவேண்டும். அதனை செனட் சபை என்ற முறையினூடாக மேற்கொள்ள முடியும்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்