திருச்சி சிறையில் இலங்கையர்கள் நால்வர் உண்ணாவிரதம்

திருச்சி சிறைச்சாலை முகாமில் இலங்கையர்கள் நால்வர் உண்ணாவிரதப் போராட்டம்

by Staff Writer 21-06-2019 | 9:17 PM
Colombo (News 1st) தமிழ்நாடு - திருச்சியில் உள்ள சிறைச்சாலை முகாமில் நான்கு இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தின் சிறப்பு முகாமில் இவர்கள் நால்வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (19) முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மூன்று வருடங்களாக தாம் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். தம்மை காலவரையறையின்றி தடுத்து வைத்துள்ளதாகவும் விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்