கொழும்பில் இந்திய சர்வதேச புடவை ஏற்றுமதி கண்காட்சி

கொழும்பில் இந்திய சர்வதேச புடவை ஏற்றுமதி கண்காட்சி

கொழும்பில் இந்திய சர்வதேச புடவை ஏற்றுமதி கண்காட்சி

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2019 | 4:13 pm

Colombo (News 1st) இந்திய கைத்தொழிற்துறை அமைச்சு மற்றும் Powerloom Development & Export Promotion Council இணைந்து கொழும்பில் கண்காட்சி ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்திய சர்வதேச புடவை ஏற்றுமதி என்ற தொனிப்பொருளில் அடுத்த மாதம் 29 ஆம் திகதி இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

ஆடை தொழிற்துறை தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்களை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும்.

இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வோர் அவற்றை கொள்வனவு செய்வோரை சந்திப்பதற்கான வசதிகள் செய்யப்படவுள்ளதுடன், செயலமர்வும் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்