காணிகளைத் துண்டாட பிரதேச செயலகங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டாம்: ஜனாதிபதி

காணிகளைத் துண்டாட பிரதேச செயலகங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டாம்: ஜனாதிபதி

காணிகளைத் துண்டாட பிரதேச செயலகங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டாம்: ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2019 | 8:35 pm

Colombo (News 1st) காணி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) மாலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, பி.ஹரிசன், கயந்த கருணாதிலக்க, தயா கமகே ஆகியோரும் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, ஜனாதிபதி தெரிவித்ததாவது,

காணி பயன்பாடு தொடர்பான சட்டங்களை நீக்குவது பாரிய குற்றமாகும். பயன்பாட்டிற்கு சட்டம் இருக்க வேண்டும். காணிகளை துண்டாக்குவதற்கு பிரதேச சபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டாம். பாரிய அழிவையே அவர்கள் செய்கின்றனர். துண்டாக்கி விற்பனை செய்கின்றனர். தவிசாளர்களின் பைகளை நிரப்பிக்கொள்கின்றனர். எனது அவதானிப்புகள் அனைத்தையும் ஏற்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் என்னால் இயங்க முடியாது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்