ஏப்ரல் 21 தாக்குதல்: 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து விசாரிக்குமாறு உத்தரவு

ஏப்ரல் 21 தாக்குதல்: 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து விசாரிக்குமாறு உத்தரவு

ஏப்ரல் 21 தாக்குதல்: 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து விசாரிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2019 | 9:01 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையக விசேட விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, குறித்த அதிகாரிகள் தொடர்பில் குற்ற விசாரணை மற்றும் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, குறித்த பிரிவுகளிடம் விசாரணைகளை பதில் பொலிஸ் மா அதிபர் ஒப்படைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்