65,000 மில்லியனுக்கான குறைநிரப்புப் பிரேரணை

65,000 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 20-06-2019 | 1:51 PM
Colombo (News 1st) வினைத்திறனற்ற தொழில்துறைக்கான சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் இன்று (20ஆம் திகதி) பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனூடாக குறைந்த வருமானம் பெறும் தொழில்துறைக்கு புத்துயிர் அளிப்பதற்கான திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திருத்த சட்டமூலத்தை சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல சபைக்கு சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, 65,000 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை முதல் பெலியத்த வரையான பகுதியை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய வகையில் இந்த குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்