by Staff Writer 20-06-2019 | 9:13 PM
Colombo (News 1st) ரயில்வே திணைக்களத்தின் சில தொழிற்சங்க ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
ரயில்வே சேவைத் தரங்களில் காணப்படும் சம்பள வேறுபாடுகளை நீக்குவது தொடர்பில் அனுமதி பெறப்பட்ட அமைச்சரவைப் பத்திரம், இதுவரை அமுல்படுத்தப்படாமை குறித்து நிதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்தமையே இதற்கு காரணமாகும்.
ரயில் சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.