குறைவான பயன்பாடுடைய சொத்துக்களுக்கு புத்துயிரளிக்கும் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

by Staff Writer 20-06-2019 | 8:25 PM
Colombo (News 1st) செயற்பாடுகள் குறைவாக உள்ள தொழில் முயற்சிகள் மற்றும் குறைவான பயன்பாட்டையுடைய சொத்துக்களுக்கு புத்துயிர் அளிக்கும் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 91 வாக்குகள் அளிக்கப்பட்டன. 69 பேர் இதற்கு எதிராக வாக்களித்ததுடன் பெல்வத்த மற்றும் செவனகல சீனித்தொழிற்சாலை காணப்படும் மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆனந்த குமாரசிறி ஆகிய அமைச்சர்கள் வாக்களிப்பின்போது பிரசன்னமாகியிருக்கவில்லை. இதற்கான யோசனையை பொது முயற்சியாண்மை மற்றும் மலையக மரபுரிமைகள், கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்திருந்தார்.