குசும்தாச, பியதாசவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

குசும்தாச மஹனாம, பியதாச திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

by Staff Writer 20-06-2019 | 1:41 PM
Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹானாம மற்றும் அரசமரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கான கட்டடம், அங்கிருந்த இரும்புப் பொருட்கள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்த இந்தியப் பிரஜைக்கு, நிறுவனத்தைக் கையளிப்பதற்காக இலங்கை சீனி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியிடம் 20 மில்லியம் ரூபா இலஞ்சம் பெற்ற 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுககொண்டபோது பிரதிவாதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 4 மாதங்கள் இரண்டு பிரதிவாதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், பின்னர் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது. பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் 46 சாட்சியாளர்களையும் 41 முறைப்பாட்டாளர்களையும் முன்னிலைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.