பாராளுமன்ற நுழைவாயில் முன்பாக செவனகல, பெல்வத்த சீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற நுழைவாயில் முன்பாக செவனகல, பெல்வத்த சீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2019 | 8:40 pm

Colombo (News 1st) பாராளுமன்ற நுழைவாயில் முன்பாக செவனகல மற்றும் பெல்வத்த சீனி தொழிற்சாலையின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2011 ஆம் ஆண்டு அரசாங்கம் கையகப்படுத்திய செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலையை மீண்டும் தனியார்மயப்படுத்த வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அமைச்சர் தயா கமகேவின் வர்த்தகத்திற்காக இந்த சீனித் தொழிற்சாலையை சுவீகரிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதிகளில் இன்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்