ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதி இரத்து

ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதி இரத்து

ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதி இரத்து

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2019 | 4:09 pm

Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வௌிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட மா அதிபர், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸுக்கு கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குறித்த சந்தேகநபர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு தொடர்வதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக வழக்கின் 10 ஆவது சந்தேகநபர் ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வௌிநாடு செல்வதற்கான அனுமதி வழங்குவதனூடாக அவர் நீதிமன்றத்தை புறக்கணிக்கக்கூடும் என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம மன்றில் தெரிவித்தார்.

வழக்கு ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்