கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2019 | 9:18 pm

Colombo (News 1st) சமுர்த்தி உத்தியோகத்தர்களின் கண்டன ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பேரணியாக புதிய மாவட்ட செயலகம் வரை சென்றதுடன், மகஜரொன்றை மேலதிக மாவட்ட அரச அதிபரிடம் கையளித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்