இந்தியாவில் கடும் வெப்பம்; 92 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடும் வெப்பம்; 92 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடும் வெப்பம்; 92 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2019 | 11:00 am

Colombo (News 1st) இந்தியாவில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலையால் குறைந்தது 92 பேர் உயிரிழந்துள்ளனர்.

வறட்சி மற்றும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள பீஹார் மாநிலத்தில் மாத்திரம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பீஹாரின் நவாடா, காயா, அவுரங்காபாத் ஆகிய பகுதிகளிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தியாவில் கடந்த 6 தசாப்தங்களாக உரிய பருவப்பெயர்ச்சி மழை கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், கடந்த 3 வாரங்களாக அதிக வெப்பமான வானிலை நீடிக்கின்றது.

சுமார் 50 பாகை செல்சியஸ் வெப்பம் நீடிக்கும் நாட்களாகவும் இது பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்