70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2019 | 1:50 pm

Colombo (News 1s​t) இரத்மலானை – கட்டுபெத்த பகுதியில் ஒருதொகை ஹெரோயினை காரின் மூலம் கடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வசமிருந்து 70 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஒரு கிலோ 127 கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிலியந்தல – மடபான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் ஹெரோயின் நிறையினை மதிப்பீடு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபர் வசமிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கார் என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்