2020 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ட்ரம்ப்

2020 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ட்ரம்ப்

2020 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ட்ரம்ப்

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2019 | 1:32 pm

Colombo (News 1st) 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதற்கான பிரசாரத்தை அவர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அத்துடன், ஒர்லான்டோவில் நேற்று இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் மாபெரும் சக்தியாக உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ​பேரணியிலும் ட்ரம்ப் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்