செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 19-06-2019 | 5:58 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அம்பாறை – கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நேற்றும் முன்னெடுக்கப்பட்டது. 02. வடக்கு மார்க்கத்திலான 4 ரயில் சேவைகளை நாளை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 03. வாகனக் கொள்வனவு உள்ளடங்கலாக 56,545 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 04. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலும் விசாரணை நடத்த வேண்டும் என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 05. கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 06. M.L.A.M. ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 07. நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 4,40,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க இராணுவத்தின் 1000 படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பென்டகன் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. 02. எகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி (Mohammed Morsi) தனது 67ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

ஏனைய செய்திகள்