தலவாக்கலையில் லயன் குடியிருப்பு தீக்கிரை

தலவாக்கலையில் லயன் குடியிருப்பு தீக்கிரை

தலவாக்கலையில் லயன் குடியிருப்பு தீக்கிரை

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2019 | 5:30 pm

Colombo (News 1st) ஹட்டன் – தலவாக்கலை, சென்கிளேயர் தோட்டம் ஸ்டெர்லின் பிரிவு லயன் குடியிருப்பொன்றில் இன்று பிற்பகல் தீ பரவியது.

இந்த தீ விபத்தில் 8 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், 6 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீயினால் குடியிருப்புகளும், மக்களின் உடைமைகளும் முற்றாக அழிந்துபோயுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இன்று பிற்பகல் 2.30 அளவில் பரவிய தீ, பிரதேச மக்களால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லின் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்