சொந்தமல்லாத வங்கிக்கணக்கில் நிதியை வைப்பிலிடுமாறு ஆலோசனை வழங்கியது யார்?

சொந்தமல்லாத வங்கிக்கணக்கில் நிதியை வைப்பிலிடுமாறு ஆலோசனை வழங்கியது யார்?

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2019 | 8:22 pm

Colombo (News 1st) வெளிநாடுகள் இரண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட வங்கிக்கணக்குகள் தம்முடையதல்லவென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தது.

தகவலறியும் சட்டத்தின் கீழ் நியூஸ்ஃபெஸ்ட் வினவியதற்கு எழுத்துமூல பதிலளித்து அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிபரப்பு உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி வைப்பிலிடப்பட்ட வங்கிக்கணக்குகள் உங்களுடையதா என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியிருந்தது.

அதற்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அமெரிக்காவிலும் மெக்ஸிகோவிலும் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த வங்கிக்கணக்குகள் தம்முடையதல்லவென தெரிவித்துள்ளது.

எனினும், அவ்வாறான வங்கிக்கணக்கில் நிதி வைப்பிலிடப்பட்டிருந்ததால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவ்வாறான வங்கிக்கணக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் இல்லை என்றால் அதனை திரும்பப் பெற முடியுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எதனை அடிப்படையாகக் கொண்டு கூறினார்?

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சொந்தமல்லாத வங்கிக்கணக்கில் நிதியை வைப்பிலிடுமாறு ஆலோசனை வழங்கியது யார்?

தென் ஆபிரிக்க கிரிக்கெட் விஜயத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நிதி மெக்ஸிக்கோவிலுள்ள வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது எவ்வாறு?

அவ்வாறே இங்கிலாந்து விஜயத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி அதாவது சுமார் 10,000 இலட்சம் ரூபாவை வேறு வங்கிக்கணக்கில் வைப்பிலிட எடுக்கப்பட்ட முயற்சி தனிநபரின் முயற்சியாகுமா?

இந்த வினாக்களுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பதிலளிக்க வேண்டும்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்