சர்ச்சைக்குரிய Trans Mountain குழாய்ப்பதிப்புத் திட்டத்திற்கு கனடா ஒப்புதல்

சர்ச்சைக்குரிய Trans Mountain குழாய்ப்பதிப்புத் திட்டத்திற்கு கனடா ஒப்புதல்

சர்ச்சைக்குரிய Trans Mountain குழாய்ப்பதிப்புத் திட்டத்திற்கு கனடா ஒப்புதல்

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2019 | 2:00 pm

Colombo (News 1st) சர்ச்சைக்குரிய Trans Mountain குழாய்ப்பதிப்புத் திட்டத்திற்கு கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில் திட்டத்தின் மூலம் பெறப்படும் வருமானம், சூழலியல் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திட்டம் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்றினால் கடந்த வருடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில், எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கின்றது.

இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடிய கனடாவின் மேற்கு பகுதியில் வசிக்கும் பிரித்தானிய – கொலம்பியாவை சேர்ந்த பழங்குடி மக்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அமெரிக்க சந்தையை கனடா நம்பியிருப்பது இந்தத் திட்டத்தால் குறையும் என கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்