by Chandrasekaram Chandravadani 19-06-2019 | 4:04 PM
இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள படத்தில் நடிப்பதற்கு கவுண்டமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வௌியாகியுள்ளன.
தில்லுக்குத் துட்டு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்ற சந்தானம், கண்ணனின் படத்தில் நடிப்பதற்கு திகதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படத்தில் நடிப்பதற்கு கவுண்டமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நிலையில், இதற்கான படப்பிடிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் படத்தின் நாயகி தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அதேநேரம் எதிர்வரும் டிசம்பரில் படத்தை வௌியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.